விடுதலைப் புலிகளின் செய்தி


தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை

Monday, July 16, 2018

புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.சி, இன்று கழியாட்ட சிங்கள ஊதுகுழலாக மாறியுள்ளது- புறக்கணிக்கவும்: சிவப்பு எச்சரிக்கைபெரு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே !

விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய வானொலியாக பல வருடங்களாக ஐ.பி.சி செயல்பட்டு வந்தது. பக்கச்சார்பின்றி அது தேசிய செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் அதன் பின்னர்(2009) பொருளாதார நெருக்கடி காரணமாக ஐ.பி.சி லிபரா என்னும் வியாபார நிறுவனத்தின் கைகளில் விழுந்தது. தற்போது ஐ.பி.சி தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்துள்ள தற்போதைய உரிமையாளர் பாஸ்கரன், இலங்கையில் இருந்தே செயல்பட்டு வருகிறார். அவருக்கும் இலங்கை அரசுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன் நிலையில், இலங்கை அரசு கொடுத்த பெரும் பணத்தைக் கொண்டே(4 மில்லியன் பவுண்டுகள்) லங்கா ஸ்ரீ இணயத்தையும் ஐ.பி.சி நிறுவனம் வாங்கியுள்ளது என ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வுத்துறையின் பெரும் வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. அதாவது வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களிடம் இருந்தே இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்கள் செல்கிறது. இதனை செயல் இழக்க வைக்க, இலங்கை அரசால் முடியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இயங்கும், தமிழ் ஊடகங்களை கைப்பற்றினால், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் மனதை மாற்ற முடியும். அதுபோல தேசிய செய்திகளை தவிர்த்து மக்களை வேறு பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இந்த காய் நகர்த்தலையே தற்போது இலங்கை அரசானது, பாஸ்கரனை வைத்து நகர்த்தி வருகிறது. ஐ.பி.சி TV மற்றும் வானொலி, அதுபோக அதன் கட்டுப்பாட்டில் உள்ள லங்கா ஸ்ரீ இணையம் என்பன சமீப காலமாக சினிமா செய்திகளுக்கு முதல் இடம் கொடுத்தும். கழியாட்ட மற்றும் மசாலா செய்திகளை பிரசுரம் செய்து வருகிறது. இதனூடாக தற்போது மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், தென்னிந்திய சினிமா மோகத்திலும் திளைத்துள்ளார்கள். இதனை இப்படியே ஒரு 5 வருடம் கொண்டு சென்றால் போதும். மீதம் உள்ள எமது போராட்டம் அப்படியே , சிதைவடைந்து போகும். எவரும் சிதைக்க தேவையே இல்லை. தானாகவே சிதைந்து போகும். இதனை தான் தற்போது லங்கா ஸ்ரீ மற்றும் ஐ.பி.சி குழுமம் செய்து வருகிறது. எனவே மக்கள் இதனை நம்பி ஏமார வேண்டாம் என நாம் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறோம்.

எமது அன்புக்கினிய மக்களே, 44,000 ஆயிரம் போராளிகளை நாம் இழந்து ஆறாத் துயரோடு எமது உரிமைகளை வென்றெடுக்க போராடி வருகிறோம். ஏற்கனவே அதன் வீரியம் குறைந்து காணப்படுகிறது. தேசியம் என்று பேசி, தேசியத்தை வியாபாரம் ஆக்கும் இதுபோன்ற ஆபாச இணையங்களுக்கு நீங்கள் அடிமையாக வேண்டாம். விழித்துக் கொள்ளுங்கள் எம் உறவுகளே...

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.